அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் மனு - ஊடகங்களுக்கு தகவல்களை கசிய விட்டதாக கபில்சிபல் குற்றச்சாட்டு

அமலாக்கத் துறை சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டப்படி விசாரணையையும் சொத்துக்கள் பறிமுதலையும் தொடங்கியது எப்படி என உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2019-08-26 09:56 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மு முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வு முன்பு காலை விசாரணை நடைபெற்றது.ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.

உயர்நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அமலாக்கத் துறை அளித்த ஆவணங்களில் என்ன இருக்கிறது என தெரியாத நிலையில், எப்படி வாதிட முடியும் என கபில்சிபல் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத்துறை ஊடகங்களுக்கு கசிய விட்டதாக  கபில்சிபல் குற்றம்சாட்டிய நிலையில், குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல்  துஷார் மேத்தா அதன மறுத்தார். மேலும், ப.சிதம்பரம் வழக்கறிஞர்களுக்கு அளித்த போது தான், தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமலாக்கத் துறையின் வழக்கு குறிப்பேட்டை ஆவணமாக  கொள்ள முடியாது என்று கபில்சிபல் தெரிவித்த போது, குறுக்கிட்ட துஷார் மேத்தா, சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறை வைத்துள்ளது என்றும், வழக்கு குறிப்பேடு தேவையில்லை என்றும் கூறினார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மூடி முத்திரையிடப்பட்ட  உறையில், சொலிசிட்டர் ஜெனரல் ஆவணங்கள் அளித்தது நடைமுறைக்கு எதிரானது என்றும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நாளுக்கும், சிதம்பரத்தை கைது செய்த நாளுக்கும் இடையே ஏதாவது புதிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தால், அது தொடர்பாக சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்து விசாரித்து இருக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

சிதம்பரத்தின் பெயரில் பெயரில் உள்ள ஒரு சொத்தை அமலாக்கத்துறை காட்டினால்  இந்த மனுவை நாங்கள் திரும்ப பெற்றுக் கொள்கிறோம்  என்றும் கபில் சிபல் தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய ஏராளமான மின்னஞ்சல்கள் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளார்கள் என  சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்து வருகிறார் என்றும், இவை குறித்து அமலாக்கத் துறை நடத்திய 3 விசாரணைகள் போதும் சிதம்பரத்திடம் தெரிவிக்கப்படதது ஏன் என்றும் கபில் சிபல் கேளவி எழுப்பினார். வழக்கு  தொடர்புடைய ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள் என்பது குறித்து அமலாக்கத் துறை விளக்க வேண்டும் என்றும்,

சி.பி.ஐ. காவலில் இருக்கும் போது ட்விட்டர் கணக்கை பயன்படுத்துகிறீர்களா என்பது போன்ற கேள்வியை  சிதம்பரத்திடம் கேட்டுள்ளனர்  என்றும், இதுவே அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் போக்கையும், தரத்தையும்  காட்டுவதாக கபில் சிபல் வாதிட்டார்.  உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்