ஏழுமலையான் கோவில் பவித்திர மாலைகள் உற்சவம் : அனைத்து தரிசனங்களையும் ரத்து செய்த தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்திர உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று ஏழுமலையானுக்கு பவித்திர மாலைகள் சமர்பிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்திர உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று ஏழுமலையானுக்கு பவித்திர மாலைகள் சமர்பிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் நடைபெறக்கூடிய உற்சவங்களிலும், தினந்தோறும் நடைபெறும் வழிபாடுகளிலும் பணியாளர்கள், பக்தர்களால் ஏற்படும் தோஷத்திற்கு, தோஷ நிவாரணம் செய்யும் விதமாக இந்த பவித்ர உற்சவம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று, மூலவர், உற்சவர், கொடி மரம், ஆனந்த நிலையம் மற்றும் துணை சன்னதிகளில் மூலவருக்கு ஆகம முறைப்படி பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையொட்டி, அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.