5- வது புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது, சந்திரயான் - 2
சந்திரயான் - 2 விண்கலம், 5- வது புவி வட்ட பாதைக்கு,வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.
சந்திரயான் - 2 விண்கலம், 5- வது புவி வட்ட பாதைக்கு,வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஜூலை 22 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் - 2 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இருக்கிறது. முன்னதாக, இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்ட பாதையில் உயர்த்தப்பட்டு, நிலவின் வட்ட பாதையை சென்றடையும். இதற்காக ஏற்கனவே, 4 முறை வட்ட பாதை உயர்த்தப்பட்டிருந்த சூழலில், நேற்று பிற்பகல் 3.04 மணிக்கு, சந்திராயன் 2 விண்கலம், 5 வது மற்றும் கடைசி புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தின் தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இதனை வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், எதிர்பார்த்த படி, அனைத்து பணிகளும் சிறப்பாக நடப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.