முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
முன்னாள் பிரதமர்களுக்கு புதுடெல்லியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர்களுக்கு, புதுடெல்லியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமது மலரும் நினைவுகளை பகிர்ந்தார். இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினர், தங்களுக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.