மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் அறிவிப்பு
இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என கர்நாடக சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதனையடுத்து முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என சட்டப்பேரவையில் குமாரசாமி அறிவித்தார்.நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மேலும் இரு நாட்கள் ஆளும் அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார்.இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை நேற்று மாலை கூடியது. கூட்டம் தொடங்கியது முதல், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாக தள உறுப்பினர்கள் இடையே மோதல் நீடித்தது. இதனால் கடும் அமளியுடன் - கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.