குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார். தற்போது பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஹிந்தி மாற்று மொழியாக இருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் உயர்நீதிமன்றங்களை பொறுத்தவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று ஹிந்தி அல்லது அந்தந்த மாநிலத்தின் அலுவல் பயன்பாட்டுக்காக பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.