ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு - மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான ராகுல் காந்தி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Update: 2019-07-04 07:50 GMT
எழுத்தாளர் கவுரி லங்கேஸ் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு அரசியலே காரணம் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக ஹிருத்மான் ஜோஷி என்பவர் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்து உள்ளதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக, மும்பை பெருநகர நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். இதனையடுத்து 15 ஆயிரம் ரூபாய் ஜாமினில் ராகுல் காந்தியை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் எம்பி ஏக்நாத் கெய்க்வாட் ராகுல் காந்திக்கு ஜாமின் உத்தரவாதம் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்