தண்ணீர் சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க ஜல்சக்தி அபியான் திட்டம் : மத்திய அரசு இன்று தொடங்க உள்ளது
தண்ணீர் சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க ஜல்சக்தி அபியான் என்னும் திட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்க உள்ளது.
தண்ணீர் சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க ஜல்சக்தி அபியான் என்னும் திட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்க உள்ளது. இதற்காக 255 கூடுதல் மற்றும் இணைச்செயலாளர்களை மத்திய அரசு ஏற்கனவே நியமித்துள்ளது. இவர்கள் வறட்சி மாவட்டங்களுகு பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இன்று முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும், அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஒரு பகுதியாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.