ஜூலை-1 முதல், 'ஜல் சக்தி அபியான்' திட்டம் - திட்டத்திற்கான பொறுப்பாளர்கள் நியமனம்

நீர்ப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க, 'ஜல் சக்தி அபியான்' திட்டம் தொடங்கப்பட உள்ளது.

Update: 2019-06-27 11:22 GMT
நாட்டிலுள்ள 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான மாவட்டங்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது. எனவே, நீர்ப் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க 'ஜல்சக்தி' அபியான் என்னும் திட்டத்தை, மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக, 255 கூடுதல் மற்றும் இணைச் செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள், ஒவ்வொரு வறட்சியான மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக இருந்து, நீர் சேமிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான பரப்புரை மற்றும் திட்டங்களை செயல்படுத்துவார்கள். மழைக் காலமான ஜூலை 1 முதல் செப்டம்பர் 15 வரை ஒரு பகுதியாகவும், அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை ஒரு பகுதியாகவும், இரண்டு பகுதிகளாக இந்த திட்டம், செயல்படுத்தப்படவுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்