சபரிமலை விவகாரம்- "புதிய சட்டம் தேவை" - மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-06-20 05:31 GMT
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக, கொல்லம் தொகுதி எம்.பி என்.கே.பிரேமசந்திரன் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தனிநபர் மசோதா இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளதாக குறிப்பிட்டார். பா.ஜ.க-வுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் சுரேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்