புதுச்சேரியில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால், தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதுச்சேரி நகரை அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக்கிய இடங்களில் அமைக்கப்படும் வழிகாட்டி பெயர்ப் பலகைகளில், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படுவதாக தமிழ் ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ் மொழியை புறக்கணிப்பதா என கேள்வி எழுப்பும் அவர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிலவும் குறைகள், அவலங்களை சரிசெய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.