"சமூக வலைதள குற்றங்களை ஆய்வு செய்ய குறைதீர் அமைப்புகள் ஏன் அமைக்கவில்லை?" - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
சமூக வலைத்தளங்கள் தொடர்பான குற்றங்களை ஆய்வு செய்ய குறைதீர் அமைப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை என்று மத்திய அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்யக்கூடிய குறைதீர் அமைப்புகளை மத்திய அரசு ஏன் இதுவரை நியமிக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், சமூக வலைத்தள நிறுவனங்கள் அரசு கேட்கும் விபரங்களை ஏன் தர மறுக்கின்றன எனவும் கேள்வி எழுப்பி விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.