தனியார் சொகுசு பேருந்து திடீர் தீ விபத்து : தனியார் சொகுசு பேருந்து திடீர் தீ விபத்து
ஆந்திர மாநில கர்னூல் அருகே தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.
ஆந்திர மாநில கர்னூல் அருகே தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட பேருந்து, கர்னூர் மாவட்டம் வழியாக வந்தபோது, திடீரென தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும் படி தெரிவித்ததால் பயணிகள் உயிர்தப்பினர். பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறை துறையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 1 கோடி ரூபாய் பேருந்து மற்றும் பயணிகளின் உடமைகள் தீயில் எரிந்து சேதமானது.