ராணுவ வீரர்களை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள் - 7 பேர் கைது
உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட சிறு தகராறில், வாடிக்கையாளர்கள் இருவரை ஹோட்டல் ஊழியர்கள் கடுமையாக தாக்கினர்.
உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட சிறு தகராறில், வாடிக்கையாளர்கள் இருவரை ஹோட்டல் ஊழியர்கள் கடுமையாக தாக்கினர். தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் ராணுவ வீரர்கள் என தெரிய வந்ததை அடுத்து இதுதொடர்பாக ஏழுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.