"மம்தா பானர்ஜிக்கு மோடி, அமித்ஷா திட்டமிட்டு நெருக்கடி" - மாயாவதி
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் திட்டமிட்டு நெருக்கடி அளித்து வருவதாக மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் திட்டமிட்டு நெருக்கடி அளித்து வருவதாக மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பிரதமருக்கு ஏற்ப செயல்படவில்லை என்பதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது என்பது நியாயமற்ற நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10 மணியுடன் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்து இருப்பதற்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு கூட்டங்களில் பேச உள்ளது தான் என்றும், தடை செய்வது என முடிவெடுத்த பின்னர் காலை முதலே பிரசாரத்துக்கு தடைவிதிக்க வேண்டியது தானே என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அழுத்தத்திற்கு தலைவணங்கி செயல்படுவது நியாயமற்றது என்றும் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.