ஆந்திராவில் நடைபெறும் "திருடர் குல விழா" : தென்னிந்தியாவின் பிரபல திருடர்கள் சங்கமிக்கும் விழா

ஆந்திராவில் ஒவ்வொரு முழுபவுர்ணமி தினத்தன்றும் தென்னிந்தியாவை சேர்ந்த திருடர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட விழா நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-05-07 09:49 GMT
சென்னையில் ஏழுகிணறு பகுதியில், கடந்த 30 ஆம் தேதி அதிகாலையில் 4 வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று திருவொற்றியூர் ரயில் நிலையத்தில், செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட திருவொற்றியூர் அரவிந்தன், புளியந்தோப்பு ஓசை மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் படி,சென்னையில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு, ஆந்திரா செல்லும் இவர்கள், நெல்லூர் மாவட்டம் கசந்தரில் நடக்கும் திருடர் குல விழாவில் தவறாமல் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது. முழு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில், ஆட்டம் பாட்டம் என பல்வேறு கொண்டாட்டங்கள் அரங்கேறுவதாக கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் உள்ள பெரிய திருடர்கள் அனைவரும் கலந்துகொள்வதால், அவர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள இவர்களை போன்ற பல திருடர்கள் அந்த விழாவில் பங்கேற்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த திடுக்கிடும் வாக்குமூலத்தை தொடர்ந்து, கைதுசெய்யப்பட இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதற்காக, ஏழுகிணறு போலீசார், சென்னை மாநகர காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்