ராகுல் காந்திக்கு எதிரான பிரிட்டன் குடியுரிமை வழக்கு - மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்
பிரிட்டன் குடியுரிமை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரிட்டன் குடியுரிமை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஜெய் பகவான் கோயல் மற்றும் சந்திர பிரகாஷ் தியாகி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.