பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது புனித ஆண்ட்ரு விருது வழங்கப்படுவதாக அறிவிப்பு

ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

Update: 2019-04-13 06:16 GMT
ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக, 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். இதற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா- ரஷ்யா இடையிலான நட்புறவு ஆழமானது என்றும், வருங்காலத்தில் இது மேலும் வலுப்பெறும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு ஐ.நா சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இதுவரை 8 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்