மக்களவை முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் இன்று தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.தமிழகத்தில், வரும் 18 ந்தேதியன்று 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்லுக்கான வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திரா, தெலங்கானா, அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர்,மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட 18 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார் தீவு மற்றும் லட்ச தீவுகளிலும் மொத்தம் 91 மக்களவை தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் ஆயிரத்து 295 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம்,ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.இதுபோல, ஒடிஷா சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.முதல்கட்ட தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன