பா.ஜ.கவின் பிரசார வாகனம் மீது மாவோயிஸ்ட் தாக்குதல் : பா.ஜ.க எம்.எல்.ஏ உட்பட 5 பேர் பலி - பிரதமர் இரங்கல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.கவின் பிரசார வாகனம் மீது மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில், பாஜக எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2019-04-10 02:46 GMT
தாண்டேவாடா ரிசர்வ் தொகுதியின் எம்.எல்.ஏ பீமா மண்டவி, மக்களவை தேர்தலை முன்னிட்டு, தாண்டேவாடா பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். பிரசார வாகனம் ஷியாமாகிரி மலைப்பகுதியில் இருந்து குவக்குண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது மாவோயிஸ்ட்கள் பிரசார வாகனம் மீது வெடிகுண்டு வீசி, துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பீமா மண்டவி மற்றும் பாதுகாப்பு படையினர் மூன்று பேர் மற்றும் அவரது ஓட்டுனர் கொல்லப்பட்டனர். பீமா மண்டவியின் உடல் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டதை அறிந்து, மருத்துவமனை சுற்றிலும் கண்ணீர் மல்க நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். பீமா மண்டவியின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், உயர்மட்ட குழுவின் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்