ஆந்திராவில் ஏப்ரல்11ஆம் தேதி வாக்குப்பதிவு - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

ஆந்திர மாநிலம் உட்பட நாடு முழுவதும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது

Update: 2019-04-09 07:35 GMT
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. அதன்படி, 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு என்பதால், இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. எனவே, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நாடு முழுவதும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று  நிறைவடையும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் மே 19-ஆம் தேதி மாலை 6 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தடை தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்