"வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்" - பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு குடிமைப்பொருள் வழங்கல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 22 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை சம்பளம் வழங்கப்படாததால் நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் குடும்பத்துடன் வாக்களிக்க மாட்டோம் எனக்கூறி பாப்ஸ்கோ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.