புதுச்சேரி : சுற்றுலா பயணிகளை கவர எலக்டிரிக் சைக்கிள்
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மாசில்லா எலக்டிரிக் சைக்கிள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மாசில்லா எலக்டிரிக் சைக்கிள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசும், தனியார் அமைப்பும் இணைந்து துவங்கியுள்ள இந்த எலக்டிரிக் சைக்கிள் சேவையை உப்பளத்திலுள்ள அரசு தங்கும் விடுதியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணிகளை கவர்வதன் மூலம், சுற்றுலா துறையை மேம்படுத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. காற்று மாசு, ஒலி மாசு இல்லாத இந்த எலக்டிரிக் சைக்கிள் சேவை மூலம், எரிபொருள் சிக்கனமும் உள்ளது. நாள் ஒன்றுக்கு உணவுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.