ரஃபேல் தீர்ப்பு சீராய்வு மனு மீதான விசாரணை : ஆவணங்கள் திருடப்பட்டதாக அரசு வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.

Update: 2019-03-07 03:15 GMT
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. மனுதாரர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், தீர்ப்பில் பல்வேறு தவறு இருப்பதாக வாதாடினார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வேணுகோபால், ரஃபேல் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக 2 நாளிதழ் மற்றும் ஒரு மூத்த வழக்கறிஞர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்