"இந்தியா பாதுகாப்பானவர்களின் கரங்களில் உள்ளது" - பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
இந்திய நாடு, பாதுகாப்பானவர்களின் கரங்களில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டிற்கு எதிரான எந்த செயல்களையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என்றார். எதற்காகவும் யாருக்காகவும் நாட்டை விட்டு ஒருபோதும் நாட்டை தலை குனிய விட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டை விட ஒன்றும் முக்கியமானது அல்ல, என்றும், முகாம்களை தாக்கி அழித்த விமானப்படை வீரர்களுக்கு தலை வணங்குவதாக அவர் கூறினார். நாடு பாதுகாப்பாக உள்ளது என நாட்டு மக்களிடம் உறுதியாக கூறுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்