சிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனம் - தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஷ்வரராவ், நியமிக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் பிரசாத் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

Update: 2019-02-20 06:16 GMT
சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஷ்வரராவ், நியமிக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் பிரசாத் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், சிபிஐ இயக்குனர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறியிருந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, சிபிஐ இயக்குனராக சுக்‌லா நியமிக்கப்பட்டதை அடுத்து,  இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்,  சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்ட விஷயத்தில் தடையிட மறுப்பு தெரிவித்துள்ளது. இயக்குனர் நியமனத்தில் வெளிப்படை தன்மை தேவை என்பதிலும் தலையிட முடியாது என கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்