காஷ்மீர் : காளான் உற்பத்தி அமோகம் : தரம் உயர்த்தப்பட்ட காளான் விளைச்சல்
ஒருகிணைந்த காளான் வளர்ச்சி மையத்தின் உதவியால், ஜம்மு-காஷ்மீரில் காளான் உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகிறது.
ஒருகிணைந்த காளான் வளர்ச்சி மையத்தின் உதவியால், ஜம்மு-காஷ்மீரில் காளான் உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மணலின் உயர் தரத்தின் காரணமாக பாதாம், குங்குமப்பூ, செரி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, காளான்கள் பயிரிடப்பட்டன. அங்கு தற்போது காளான்களின் தரம், விளைச்சல் மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.