"சபரிமலையில் பெண்கள் சாமி தரிசனம் செய்தது எப்படி...?" - கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
சபரிமலையில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் தேவை என சபரிமலை கண்காணிப்புக்குழு கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சபரிமலையில் தரிசனத்திற்காக காவல் துறையின் பாதுகாப்பு கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ரேஷ்மா நிசாந்த் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சபரிமலை கண்காணிப்புக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. பெண் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்குமிடம், காட்டு பாதையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போன்றவை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் தேவை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனகதுர்கா, பிந்து ஆகியோர் சாமி தரிசனம் செய்தது எப்படி என்பது குறித்து பத்தணந்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாராயணன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், பதினெட்டாம் படி வழியாக சென்றால் பதற்றம் உருவாகும் என்பதால், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் இரண்டு பேரையும் அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.