சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா, பிந்துவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில், 50 வயதுக்கு உட்பட்ட 51 பெண்கள் சாமி தரிசனம் செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-01-18 09:26 GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ஜனவரி 2 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு கனக துர்கா மற்றும் பிந்து என்ற இரு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கு சிலர் தொடர் மிரட்டல் விடுத்து வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் இருந்து 24 பெண்கள், ஆந்திராவில் இருந்து 21 பெண்கள், தெலங்கானாவில் இருந்து 3 பெண்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஒரு பெண்ணும், யூனியன் பிரதேசங்களான கோவா, புதுச்சேரியிலிருந்து தலா ஒரு பெண் என மொத்தம் 51 பேர் சபரிமலையில் தரிசனம் செய்திருப்பதாக கேரள அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து, கனக துர்கா மற்றும் பிந்துவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்