சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்...

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

Update: 2019-01-14 01:43 GMT
சபரிமலையில் பக்தர்களுக்கு ஜோதி வடிவாக ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். அதன்படி, இன்று மாலை மகர ஜோதியாக, பொன்னம்பல மேட்டில் காட்சி தரும் ஐயப்பனை தரிசிப்பதற்காக, சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  மகரஜோதி தரிசனத்தையொட்டி, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட உள்ளன. நிகழ்ச்சியையொட்டி, சபரிமலை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் - பம்பை இடையே இலவச பேருந்து வசதி துவங்க உள்ளதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். சபரிமலையில், நடைபெறும் மகரஜோதி தரிசன நிகழ்ச்சியை, தந்தி டி.வி. இன்று மாலை 4 மணி முதல் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இந்நிலையில், சபரிமலைக்கு பெண்கள் வந்ததாக வதந்தி ஏற்பட்டதால் பரபரப்பு கிளம்பியது. ஆனால், சபரிமலைக்கு மாலை அணிந்து வந்த திருநங்கைகள் என தெரியவந்ததும்  சகஜ நிலை திரும்பியது.
Tags:    

மேலும் செய்திகள்