யு.பி.எஸ்.சி. திறனறி தேர்வால் பாதிப்பு

இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி மற்றும் வனத்துறை பணிகளில் உயர் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்துகிறது.

Update: 2019-01-02 04:44 GMT
இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி மற்றும் வனத்துறை பணிகளில் உயர் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. இதற்கான முதல்நிலை தேர்வுகளில், C.S.A.T என்று அழைக்கப்படும் திறனறி தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தத் தேர்வு, ஆங்கில மொழி புலமை உள்ளவர்களுக்கு சாதகமானது என்பதால்,  தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறி, மாணவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், இந்தத் தேர்வை ரத்து செய்யக்கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்தத் திறனறி தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தங்களை UPSC தேர்வுகளை  தொடர்ந்து எழுத அனுமதிக்கக் கோரி, டெல்லியில் உள்ள  UPSC அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்