மத்தியபிரதேச முதலமைச்சராக கமல்நாத் தேர்வு
மத்தியபிரதேச முதலமைச்சராக கமல்நாத் தேர்வு
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி முதலமைச்சர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி ,காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்கு மூத்த தலைவர் கமல்நாத், ஜோதிர்தியா சிந்தியா இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் புதிய முதலமைச்சராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கேட்டு, போபாலில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் குவிந்த கமல்நாத் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்