"விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை என்ன?"- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Update: 2018-11-19 12:08 GMT
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கிராந்திய அக்ரி என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, விவசாயிகளின் தற்கொலையை தடுக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த பிரமாணப் பத்திரம் குறித்து 4 வாரங்களுக்குள் மனுதாரர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்