மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம்

மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.

Update: 2018-11-14 05:01 GMT
* அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹூலுவாடி ஜி.ரமேஷ் கடந்த 2016 ஏப்ரல் மாதம்   சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். அவர் தற்போது தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது நீதிபதியாக உள்ளார்.

* இந்நிலையில் நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷை மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக குறைந்து, காலியிடம் 14 ஆக உயர்ந்தது. 

* இந்நிலையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது. 

* இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்