புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இன்று செல்கிறார்.

Update: 2018-11-12 05:38 GMT
பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இன்று  செல்கிறார். அங்கு  ஆயிரத்து 571 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை   தொடங்கி வைக்கிறார். கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எனும் உள்நாட்டு கப்பல் தேசிய நீர்வழி பாதை வழியே பயணித்து இன்று வாரணாசி வந்தடைகின்றது. அந்த சரக்கு கப்பலை பிரதமர் மோடி  வரவேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்