நாளை சபரிமலை நடைதிறப்பு - 2 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.

Update: 2018-11-04 05:24 GMT
கடைசி மன்னரின் பிறந்தநாளையொட்டி வருடம்தோறும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 6ம் தேதி இரவு நடை சாத்தப்படுகிறது.
 
இதனையடுத்து 2 ஆயிரம் போலீசார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  இதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் வரும்  6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்