"இந்தியா ஒரு முறை தாக்கினால் பதிலாக 10 முறை தாக்குதல் நடத்தப்படும்" - பாகிஸ்தான்

இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

Update: 2018-10-14 07:18 GMT
பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ந் தேதி வானொலியில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பலத்த பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகமா குறிப்பிட்டு பேசினார்.
 
இந்நிலையில், பாகிஸ்தான் மீது ஒரு முறை  தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பு அதிகாரி ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படலாம் என நினைப்பவர்களுக்கு எங்களின் வலிமை மீது சந்தேகம் வர வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்