திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது, கோவிலின் அலங்காரத்துக்காக, திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
* திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது, கோவிலின் அலங்காரத்துக்காக, திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு துளசி, ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை உள்ளிட்ட வாசனை பூக்களை தொடுத்தனர்.
* இது தவிர, ரோஜா செடிகள், கரும்பு, தென்னங் குருத்து, பாக்கு, இளநீர் குலைகள், மாங்காய் கொத்து போன்றவையும் திருப்பதிக்கு அனுப்பப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை திருச்செங்கோட்டில் உள்ள திருப்பதி திருமலை ஸ்ரீமன் நாராயண புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் செய்துள்ளது.