திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா : பொன் ராதாகிருஷ்ணன் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரத்தில் இருந்து, சுவாமி சிலைகள் மற்றும் பண்டைய மன்னரின் உடைவாள் ஆகியன திருவனந்தபுரம் நோக்கி புறப்படும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
நவராத்திரி பூஜைக்காக, பத்மநாபபுரத்தில் இருந்து, சுவாமி சிலைகள் மற்றும் பண்டைய மன்னரின் உடைவாள் ஆகியன திருவனந்தபுரம் நோக்கி புறப்படும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பண்டைய மன்னரின் உடைவாள் மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோவில் முருகன், தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக இவை எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கேரள அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், கடனப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேரள - தமிழக மக்களிடையே ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இவ்விழா நடைபெகிறது.
சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி இளைஞர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு :
"நவராத்திரி பவனி" துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் திடீரென, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டதற்கு எதிராகவும், சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தியும், கைகளால் எழுதி வைத்திருந்த காகிதத்தை தூக்கிக் காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் ஐயப்பனின் சரணங்களையும் பாடினர். இதையடுத்து, அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இளைஞர்கள் சமாதானம் அடைந்தனர்.