10 மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு...

மத்திய அரசு எடுத்த முடிவை தொடர்ந்து 10 மாநிலங்கள் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

Update: 2018-10-04 20:03 GMT
பெட்ரோல் - டீசல் விலையை  லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்து, மத்திய அரசு எடுத்த முடிவை தொடர்ந்து, 10 மாநிலங்கள், விலையை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதன்படி, மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, இந்த 10 மாநிலங்களிலும், பெட்ரோல் - டீசல் விலை,  லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்