"போலி செய்திகளை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" - பேஸ்புக், டுவிட்டர் உறுதி

போலி செய்திகளை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என, இந்திய தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உறுதியளித்துள்ளன.

Update: 2018-10-01 04:40 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற பிரசாரம் இந்திய தேர்தலின் போதும் மேற்கொள்ளப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பசுவதை உள்ளிட்ட விவகாரங்களில் கும்பல் தாக்குதல் செய்திகள் வெளியானதை அடுத்து, சமூக வலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதையடுத்து வாட்ஸ்-அப் நிறுவனம் போலி செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, போலி செய்திகளை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்துள்ளன. தேர்தல் புனிதத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்தஒரு செயலுக்கும் தங்களுடைய தளங்களை அனுமதிக்க மாட்டோம் என அந்த நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக, தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்