பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது...
இங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
இங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. 445 கிலோ எடை கொண்ட நோவா எஸ்.ஏ. ஆர். செயற்கை கோள், இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், பனிப்படலம் ஆகியவற்றை கண்காணிக்கவும், 444 கிலோ எடை கொண்ட எஸ் 1 - 4 செயற்கை கோள் பேரழிவு மேலாண்மை, சுற்றுச் சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிக்காகவும் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இன்று இரவு 10:07 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் பயணத்திற்கான கவுண்டவுன் நேற்று பிற்பகல் 1.07 மணிக்கு தொடங்கியது.