14வது நாளாக ஹர்திக் படேல் உண்ணாவிரதம் - வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

போலீசார் குண்டுகட்டாக தூக்கி, ஹர்திக் பட்டேலை, வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Update: 2018-09-07 19:34 GMT
குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீடு கோரி, அம்மாநில இளைஞர் அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல், அகமதாபாத்தில் மேற்கொண்ட  காலவரையற்ற உண்ணாவிரதம் 14- வது நாளை எட்டியுள்ளது. உடல் நிலை மோசமானதை அடுத்து, போலீசார் குண்டுகட்டாக தூக்கி, ஹர்திக் பட்டேலை, வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, ஹர்திக் பட்டேலுக்கு ஆதரவாக களமிறங்கிய குஜராத் அரசியல் பிரமுகர்கள், மாநில அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்