பா.ஜ.க முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம்
பாஜக முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மற்றும் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள துணை முதலமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. இதில், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, உட்பட 15 மாநில பாஜக முதல்வர்களும், பீகார் உள்ளிட்ட 7 மாநில துணை முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை பா.ஜ.க முதல்வர்களை பிரதமர் மோடி சந்திப்பது வழக்கம். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்டட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும், நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்தும், பா.ஜ.க. மாநிலங்களில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இன்று மாலை 6 மணி வரை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.