ஓசூரில் கிராம மக்களிடம் பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி...

ஓசூர் அருகே கிராமமக்களிடம் பிடிப்பட்ட அரியவகை எறும்பு தின்னி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2018-08-25 06:45 GMT
ஓசூர் அருகே கிராமமக்களிடம் பிடிப்பட்ட அரியவகை எறும்பு தின்னி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கெம்பசந்திரம் கிராமத்தில் எறும்புதின்னி ஒன்று சாலையில் ஓடி சென்றுள்ளது. உடல் முழுவதும் கடினமான செதில்களால் நிரம்பி இருந்த இந்த விலங்கினை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். பின்னர் அதனை பிடிக்க பொதுமக்கள் முயன்ற போது அது தன்னுடைய உடலை சுருட்டி கொண்டது. இதனையடுத்து பெரிய குவளையை கொண்டு எறும்பு தின்னியை பொதுமக்கள் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், எறும்பு தின்னியை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்