ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுக்க மத்திய அரசு புது முடிவு
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
* சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
* அந்த வகையில், தற்போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவில் சில விதிகளை உள்ளடக்கி,சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
* புதிய விதிகளை உள்ளடக்கிய இந்த சட்ட திருத்தம் வரும் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* அதன் படி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய, அந்தந்த நிறுவனங்களின் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.