பான்கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு

பான்கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 37 கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

Update: 2018-08-22 09:52 GMT
ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், புதியதாக ஒரு கோடியே 96 லட்சம் பான்கார்டுகளை, வருமான வரித்துறை விநியோகித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில், 35 கோடியே 90 லட்சமாக இருந்த பான் கார்டுகளின் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தில் 37 கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளதாக, தெரிவித்துள்ளது. சுமார் ஒரு கோடியே 90 லட்சம் தனி நபர்கள் மற்றும் 87 ஆயிரம் நிறுவனங்கள், புதியதாக பான்கார்டுகளைப் பெற்றுள்ளதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, அனைவரும் பான் கார்டுகள் வாங்க, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்