கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா...

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் தத்தளிக்கிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2018-08-11 04:40 GMT
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் தத்தளிக்கிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் முப்படையினரும்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.

வயநாடு மாவட்டத்தில் கனமழையால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நிலமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாழை மரங்கள் காய்களுடன் குலைதள்ளிய நிலையில் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் 24 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஷிருதோனி அணையில் இருந்து 5 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டும் கண்கொள்ளா காட்சியை உள்ளூர்மக்கள்  கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி கண்டு மெய்மறந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்