வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சரிசெய்யும் வகையில், திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2018-08-02 07:40 GMT
வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு அதிகாரிகள் இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் போது, அதிகாரிகளின் அனுமதி பெற்று கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. நாடு முழுவதும் இந்த உத்தரவுக்கு பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை சரிசெய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. வரும் மழைக்கால கூட்டத்தொடரில், திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்