இணைய பாதுகாப்பில் பின் தங்கிய இந்தியா..!
இணைய பாதுகாப்பில் இந்தியா பின் தங்கியுள்ளதாக பிரதமரின் சைபர் பாதுகாப்பு அதிகாரி குல்சன் ராய் தெரிவித்துள்ளார்.
இணைய பாதுகாப்பில் இந்தியா பின் தங்கியுள்ளதாக பிரதமரின் சைபர் பாதுகாப்பு அதிகாரி குல்சன் ராய் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற இணையதள பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய குல்சன் ராய் இதனை தெரிவித்தார்.
உறுதியான இணைய பாதுகாப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் 23-வது இடத்தில் உள்ள இந்தியாவை முதல் பத்து இடங்களுக்குள் முன்னேற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.